இன்றைய இந்தியர் 3 குழுக்களின் கலப்பு என்கிறது ஆய்வு

இன்றைய இந்தியர் 3 குழுக்களின் கலப்பு என்கிறது ஆய்வு

Priya Moorjani என்ற University of California (Berkeley) சனத்தொகை மரபணு ஆய்வாளரும் அவரின் குழுவும் செய்த ஆய்வு ஒன்று இன்றைய இந்தியர் 3 வெவ்வேறு குழுக்களின் கலப்பு என்று கூறுகிறது.

இந்த ஆய்வு குழு 2,700 க்கும் அதிகமான இன்றைய இந்தியர்களின் மரபணுக்களை மேற்படி ஆய்வுக்கு பயன்படுத்தி உள்ளது. இந்த ஆய்வு Science என்ற ஆய்வு வெளியீட்டில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆய்வு இன்றைய இந்தியர் (1) பல பத்தாயிரம் ஆண்டுகளாக இப்பகுதியில் வாழ்ந்தவர்கள், (2) சுமார் 6,700 முதல் 5,000 ஆண்டுகளுக்கு முன் (4,700 BCE – 3,000 BCE) வந்த பாரசீகர், (3)சுமார் 3,900 முதல் 3,500 ஆண்டுகளுக்கு முன் (1,900 BCE – 1,500 BCE) வந்த Eurasian ஆகியோரின் கலப்பு என்கிறது.

இன்றைய ஐரோப்பா பகுதியில் ஆதி காலத்தில் வாழ்ந்த Neanderthals என்ற மூதையரின் தெரிந்த மரபணுக்களின் 90% மரபணு மேற்படி 2,700 இந்தியர்களின் மரபணுக்களில் இருந்துள்ளன. ஆனால் பிறிதொரு ஆய்வின்படி சுமார் 27,000 Iceland நாட்டவரின் மரபணுக்களில் சுமார் 40% Neanderthals மரபணுக்கள் மட்டுமே இருந்துள்ளன.