இம்ரான் கான் மீது பயங்கரவாத குற்ற வழக்கு தாக்கல்

இம்ரான் கான் மீது பயங்கரவாத குற்ற வழக்கு தாக்கல்

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது தற்போதைய அரசு பயங்கரவாத குற்ற வழக்கு ஒன்றை திங்கள் தாக்கல் செய்து உள்ளது. இம்ரான் கான் கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் பதவியை இழந்து இருந்தார்.

இவரின் கைதை தடுக்க ஆதரவாளர் இம்ரானின் இஸ்லாமபாத் வீட்டை முற்றுகை இட்டு இருந்தனர். அதனால் இம்ரானுக்கு கைதுக்கு முன்னான பிணை (pre-arrest bail) வழங்கப்பட்டு உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இம்ரான் செய்த ஊர்வலம் ஒன்றில் அரசுக்கு ஏதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருந்தார். அத்துடன் அரசுக்கும், நீதிபதி ஒருவருக்கும் எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் கூறி இருந்தார். தனது உதவியாளர் Shahbaz Gill ஆகஸ்ட் 9ம் திகதி கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கூறி இருந்தார்.

போலீஸ் மீது இம்ரான் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார் என்று கூறியே அரசு இம்ரான் மீது வழக்கு தொடர்கிறது.

இம்ரான் நேரடி ஒளிபரப்புகள் அல்லது ஒலிபரப்புகள் செய்வதும் தடை செய்யப்பட்டு உள்ளது.