இரண்டு ஆண்டுகளுக்கு இழுத்து மூடப்படும் Kennedy Center

இரண்டு ஆண்டுகளுக்கு இழுத்து மூடப்படும் Kennedy Center

1933ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இருக்கும் பகுதியில் ஒரு கலாச்சார நிலையம் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. ஆனாலும் போதிய நிதி மற்றும் இணக்கப்பாடு இன்மையால் நீண்ட காலம் அந்த முயற்சி கைகூடவில்லை.

1961ம் ஆண்டளவில் சனாதிபதி John F. Kennedy கலாச்சார நிலையத்தை அமைக்கும் முயற்சியை உறுதியாக முன்னெடுத்தார். கென்னடி 1963ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

ஆனாலும் கென்னடியின் முயற்சி தொடர்ந்தது. அரச நிதி மட்டுமன்றி நிலைய கட்டுமானத்துக்கு தனியார் நிதியும் குவிந்தது. அமெரிக்க காங்கிரஸ் இந்த நிலையத்துக்கு “John F. Kennedy Center” என்று பெயர் சூட்டியது. 1971ம் ஆண்டு நிலையம் சேவைக்கு வந்திருந்தது.

2025ம் ஆண்டு சனாதிபதி ரம்ப் Kennedy Centre board உறுப்பினர்களை கலைத்து, தனக்கு கீழ்ப்பணிபவர்களை board உறுப்பினர் ஆக்கினார். புதிய உறுப்பினர் பதிலுக்கு ரம்பை chairman ஆக்கினர். இவர்கள் கூட்டாக நிலையத்தின் பெயரை “Trump Kennedy Center” என்று மாற்றி ரம்பின் பெயரையும் புகுத்திக்கொண்டனர்..

உடனடியாக இந்த நிலையத்தில் கலாச்சார நிகழ்ச்சிகளை செய்ய இருந்தோர் தமது நிகழ்ச்சிகளை இரத்து செய்தனர். அதனால் நிலையத்தில் நிகழ்த்துவதற்கு போதிய நிகழ்ச்சிகள் இல்லாமை போனது.

வேறு வழியின்றி நிலையத்தை ரம்ப் இரண்டு ஆண்டுகளுக்கு மூடி உள்ளார். மூடலுக்கு திருத்த வேலைகள் காரணம் என்று காரணமும் கூறியுள்ளார் ரம்ப்.

இரண்டு ஆண்டுகளில் ரம்பின் பதவிக்காலம் ஏறக்குறைய முடிந்துவிடும்.