இரண்டு நாடுகள் போல் மோதும் அசாம், மிசோராம்

இரண்டு நாடுகள் போல் மோதும் அசாம், மிசோராம்

இந்தியாவின் இரண்டு மாநிலங்களான அசாமும், மிசோராமும் இரண்டு நாடுகள் போல் தம்முள் மோதிக்கொள்கின்றன. ஜூலை 26ம் திகதி ஆரம்பித்த வன்முறை இன்றும் தொடர்கிறது. மோதல்களுக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். பலியானோரில் 6 பேர் அசாம் போலீசார்.

மிசோராம் கூற்றுப்படி 200 அசாம் போலீசார் மிசோராம் எல்லைக்குள் நுழைந்து, Vairengte என்ற இடத்தில் 20 போலீசாருடன் இருந்த இருந்த மிசோராம் போலீஸ் நிலையத்தை தாக்கி உள்ளனர். உடனே மேலும் பல மிசோராம் போலீசார் உதவிக்கு வந்து அசாம் போலீசை தாக்கி உள்ளனர்.

சுதந்திர காலத்தில் மிசோராம் என்ற மாநிலம் இருத்திருக்கவில்லை. 1972ம் ஆண்டே மிசோராம் என்ற மாநிலம் அசாம் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. தற்போது அசாம் மாநிலம் பா.ஜ. ஆட்சியில் உள்ளது. மிசோராம் மாநிலம் பா.ஜ. கூட்டு ஆட்சியில் உள்ளது. ஆனாலும் டெல்லி தற்போதைய வன்முறைகளை தடுக்க இதுவரை முன்வரவில்லை. இப்பகுதி மக்களின் ஆதரவும் பா.ஜ . வுக்கு தேவை.

மிசோராமுக்கும் இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும் அசாம் மூலமே பயணிக்க வேண்டும். ஆனால் பயம் காரணமாக அல்லது அசாமின் தடை காரணமாக பொருட்கள் தற்போது மிசோராமுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

சுமார் 1,318 சதுர km பரப்பளவு கொண்ட மலை மற்றும் காட்டு பகுதியே தற்போதைய மோதலுக்கு காரணம். இரு பகுதிகளும் மேற்படி நிலத்தை தமது மாநிலத்துக்கு உரியது என்று உரிமை கொண்டாடுகின்றனர்.