இரண்டு Air France விமானங்கள் திசை திருப்பம்

AF65

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் சென்ற இரண்டு பெரிய விமானங்கள் இடைவழியில் தரை இறக்கப்பட்டுள்ளன. அச்சுறுத்தலை விடுத்தோர் பற்றிய விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
.
அமெரிக்காவின் Los Angeles நகரில் இருந்து பாரிஸ் சென்ற AF65 விமானம் Salt Lake City நகரில் தரை இறக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு மிகப்பெரிய பயணிகள் விமானமான AirBus 380 ஆகும். இதில் 400 க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர்.
.
அத்துடன் அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டன் DCயில் இருந்து பாரிஸ் நோக்கி சென்ற Air France விமானம் AF55 இந்த அச்சுறுத்தல் காரணமாக கனடாவின் Halifax நகரில் தரை இறக்கப்பட்டுள்ளது. தேடுதலின் பின் இந்த விமானங்கள் மீண்டு பயணத்தை தொடங்கி உள்ளன.
.
AF55
.
அதேவேளை பாரிஸ் நகருக்கு வடக்கே உள்ள Saint-Denis என்ற இடத்தில் சூட்டு சத்தங்களுடன் கூடிய தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக செய்திகள் கூறுகின்றன.

.