இரு Boeing விமானங்களும் விழ காரணம் ஒன்றே

EthiopianAir

எதியோப்பியாவின் Ethiopian Airlines விமான சேவைக்கு சொந்தமான புதிய Boeing MAX 8 விமானமும், இந்தோனேசியாவின் Lion Air விமான சேவைக்கு சொந்தமான புதிய Boeing MAX 8 விமானமும் விழ காரணம் ஒன்றே என்று ஆரம்பகட்ட விசாரணைகள் கூறுகின்றன.
.
இரண்டு நிகழ்வுகளிலும் விமானங்களில் உள்ள தாக்கல் கோணத்தை அளக்கும் கருவிகள் (Angle of attack sensor) தவறான தரவை வழங்க, விமானம் அளவுக்கு மிஞ்சி கீழ்நோக்கி பறக்க முனைந்து வீழ்ந்துள்ளன. அதாவது விமானம் சரியான கோணத்தில் (கிடையில் இருந்து சுமார் 0 பாகை) பறக்க, கோணத்தை அளக்கும் இடது பக்க கருவி விமானம் 60 பாகை மேல்நோக்கி பறக்கிறது என்று கணிக்க, அதை தடுக்கும் கருவி விமானத்தை 60 பாகையால் கீழ்நோக்கி திருப்பி உள்ளது. அதனால் விமானம் பறக்கும் வல்லமையை இழந்து வீழ்ந்துள்ளது.
.
இவ்வாறு விமானம் கீழ் நோக்கி பறப்பதை விமானிகள் பல தடவைகள் தடுக்க முயன்றாலும், விமானம் மீண்டும், மீண்டும் கீழ்நோக்கி பறந்துள்ளது.
.
இரண்டு விமானங்களும் ஏறி சில நிமிடங்களிலேயே குழப்பத்துக்கு உள்ளானதால், அதாவது நிலத்தில் அல்லது கடலில் இருந்து சில ஆயிரம் அடிகள் உயரத்தில் மட்டும் இருந்ததால் தவறை திருத்த போதிய இடைவெளி இருந்திருக்கவில்லை.
.
தற்போது இந்த தவறு ஒரு design தவறு என்றும், விமானிகளின் தவறு அல்ல என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
.