இறைச்சி தட்டுப்பாடு ஒருபுறம், பன்றி அழிப்பு மறுபுறம்

Smithfield

கரோனா பரவல் காரணமாக சந்தையில் இறைச்சி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நேரம், பன்றியை வளர்க்கும் பண்ணைகள் தமது பன்றிகளை அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எமது வாழ்க்கை முறை மாறியதே இந்த முரண்பாடுக்கு பிரதான காரணம்.
.
பெருநகரங்ககளை நோக்கி மக்கள் படையெடுத்துள்ள இக்காலத்தில் அவர்களுக்கு தேவையான இறைச்சியை வெட்டும் நிலையங்கள் (slaughterhouse) மிருகங்களை வெட்டி, பதனிட்டு, பொதிகளில் அடைத்து வழங்கி வந்துள்ளன. அவ்வகை சாலைகள் தற்போது கரோனா காரணமாக மூடப்பட்டு உள்ளன. அமெரிக்காவில் உள்ள Smithfield போன்ற இவ்வகை இறைச்சி தயாரிப்பு சாலைகளில் மட்டும் சுமார் 15,000 பேர் கரோனா தொற்றியும், 60 பேர் பலியாகியும் உள்ளனர்.
.
உணவுக்கான மிருகங்களை வெட்டி பதனிடும் சாலைகள் மூடப்பட, அவற்றுக்கு பன்றி போன்ற மிருகங்களை வழங்கு பண்ணைகள் தமது கையிருப்புகளில் உள்ள மிருகங்களை என்ன செய்வது என்று தெரியாது தவிக்கின்றனர். இலாசவமாக பன்றிகளை வழங்கினாலும், நகரத்து மக்களால் முறைப்படி வெட்டவோ, அல்லது பதனிடவோ முடியாது.
.
அமெரிக்காவில் நாளாந்தம் 200,000 பன்றிகள் மட்டும் வெட்டுமிடம் செல்லாது பண்ணைகளில் முடங்குகினறன. அவற்றுக்கு மேலதிக உணவு தேவை. அத்துடன் பன்றிகள் 300 இறத்தல் (136 kg) எடைக்கு மேலானால் பதனிடும் சாலைகளில் அவற்றை கையாள முடியாது. அந்நிலையில் அவற்றை அழித்து, புதைப்பதை தவிர வேறு வழிகள் பண்ணை உரிமையாளர்களுக்கு இல்லை.
.