இலங்கைக்கு எதிராக UNHRC வாக்களிப்பு, இந்தியா கபடம்

இலங்கைக்கு எதிராக UNHRC வாக்களிப்பு, இந்தியா கபடம்

இன்று செவ்வாய் இடம்பெற்ற இலங்கை தொடர்பான வாக்களிப்பில் UNHRC தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்து உள்ளன. மொத்தம் 47 வாக்குகள் கொண்ட அவையில் 14 நாடுகள் வாக்களியாத நிலையில் தீர்மானம் வெற்றி பெற்றது.

பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டும் இந்தியா வாக்களியாது இன்று மறைந்து (abstained) உள்ளது. ஆனால் வாக்களிப்புக்கு முன் இந்தியா 13ம் திருத்தத்துக்கு அமைய இலங்கை செயற்படவேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளது. கூடவே பஹ்ரைன், கமரூன், இந்தோனேசிய, ஜப்பான், லிபியா, நேபாள், ஆகிய நாடுகளும் வாக்களிக்கவில்லை.

UNHRC தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் அர்ஜென்டீனா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, தென்கொரியா, பிரித்தானியா, ஆகியனவும் அடங்கும்.

சீனா உட்பட 11 நாடுகள் UNHRC தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து உள்ளன. அந்த பட்டியலில் பங்களாதேசம், கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், பிலிப்பீன், ரஷ்யா, சோமாலியா, உஸ்பேகிஸ்தான், Venezuela ஆகிய நாடுகளும் அடங்கும்.

“Promotion of Reconciliation Accountability and Human Rights in Sri Lanka” என்று தலைப்பிடப்பட்ட தீர்மானம் 22 வாக்குகளை பெற்ற ஏற்றுக்கொள்ளப்பட்டது.