இலங்கைக்கு $72.6 மில்லியன் ரஷ்ய எரிபொருள்

இலங்கைக்கு $72.6 மில்லியன் ரஷ்ய எரிபொருள்

கடந்த சில கிழமைகளாக கொழும்பு துறைமுகத்துக்கு அண்மையில் 90,000 தொன் ரஷ்ய மசகு எண்ணெயுடன் தரித்து நின்ற கப்பலில் இருந்து அந்த மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த எண்ணெய்க்கு உரிய $72.6 மில்லியன் பணம் இலங்கை அரசால் செலுத்தப்பட்ட பின்னரே மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.

மார்ச் மாதம் 25ம் திகதி முதல் மூடப்பட்டுள்ள இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மேற்படி ரஷ்ய மசகை சுத்திகரிக்கும் பணியை ஆரம்பிக்கும்.

அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்து உள்ள காலத்திலேயே வேறு வழியின்றி இலங்கை ரஷ்ய மசகை கொள்வனவு செய்கிறது. ரஷ்யாவின் இந்த மசகு டுபாயை தளமாக கொண்ட Coral Energy என்ற நிறுவனம் மூலமே பெறப்படுகிறது.

Coral மூலம் மேலும் ஒரு தொகை மசகு எண்ணெய் அடுத்த 2 கிழமைகளில் கொள்வனவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கப்பல் $31 மில்லியன் பெறுமதியான எரிபொருளுடன் (furnace oil) கொழும்பில் தரித்து உள்ளது. உரிய பணம் செலுத்தப்பட்டாலேயே இந்த எரிபொருள் இறக்குமதி செய்யப்படும்.