இலங்கையின் முதல் 10 மாத ஏற்றுமதி $14 பில்லியன்

இலங்கையின் முதல் 10 மாத ஏற்றுமதி $14 பில்லியன்

இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையான 10 மாதங்களில் இலங்கை $14 பில்லியன் பெறுமதியான பொருட்களையும், சேவைகளையும் ஏற்றுமதி செய்துள்ளது என்கிறது Export Development Board (EDB). இலங்கையின் வரலாற்றில் இதுவே முதல் 10 மாதங்களுக்கான அதிக ஏற்றுமதி வருமானம்.

இந்த ஆண்டின் 12 மாதங்களுக்கான மொத்த ஏற்றுமதி குறி $18 பில்லியன்.

கடந்த ஆண்டின் முதல் 10 மாத கால பகுதியின் ஏற்றுமதியிலும் இந்த ஆண்டு ஏற்றுமதி 6% ஆல் அதிகரித்து உள்ளது. இந்த ஏற்றுமதியுள் சாதாரண பொருட்கள் மட்டுமன்றி வைரம், ஆபரணங்கள், தென்னம் பொருட்களுடன் சேவைகளும் ஆகியனவும் அடங்கும்.

இந்த 10 மாத காலத்தில் தென்னம் பொருட்கள் மட்டும் $1 பில்லியனுக்கு அதிகமான ஏற்றுமதி வருமானத்தை வழங்கி உள்ளது.

முதல் 10 மாத காலத்தில் இலங்கை $3.06 பில்லியன் பெறுமதியான சேவைகளையும் ஏற்றுமதி செய்துள்ளது. சேவை ஏற்றுமதி வளர இலங்கையில் வளரும் தொழில்நுட்ப அறிவு பிரதான காரணம்.