இலங்கையின் 70% வருமதி கடன் வட்டி செலவுக்கு

SriLanka

இலங்கையின் கடன் சுமை மெல்ல நாட்டின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் செல்லவுள்ளது. நாடு பெற்ற கடன்களின் வட்டிகளுக்கு மட்டும் அரசின் 70% வருமதி செலவிடப்படுகிறது. அதனால் இலங்கையின் நாணயம் வலு இழந்து வருவதுடன், இலங்கைக்கான கடன் நன்பிக்கையும் (credit rating) வீழ்கிறது.
.
IMF ஐ உதவிக்கு நாடினால், அது கடுமையான நிபந்தனைகளை விதிக்கும். குறிப்பாக வரிகளை அதிகரித்து, செலவுகளை குறைக்க அழுத்தும். தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு அது ஆபத்தான விசயம். இது தொடர்பாக பெப்ரவரி மாதம் IMF எச்சரிக்கையும் விடுத்தது இருந்தது.
.
வரும் டிசம்பர் மாதத்துள் சுமார் $3.2 பில்லியன் கடனை இலங்கை அடைத்தல் அவசியம். வரும் அக்டோபர் மாதம் $1 பில்லியன் பெறுமதியான bond கடனை அடைதல் அவசியம். கடனை அடைக்க மீண்டும் கடன் பெறவேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்படும்.
.
S&P Global என்ற rating நிறுவன கணிப்பின்படி இலங்கையின் பண நிலவரம் லெபனானுக்கு (Lebanon) அடுத்து உள்ளது. லெபனான் மட்டுமே இலங்கையிலும் அதிகமான வீத வருமதியை வட்டியில் செலவழித்து உள்ளது.
.
கரோனா வரைஸ் காரணமாக இலங்கைக்கான உல்லாசப்பயண வருமானமும் சுமார் 75% ஆல் குறைந்து உள்ளது. இது நிலைமையை மேலும் பாதித்து உள்ளது.
.
இலங்கை விரைவில் வருமானத்தை அதிகரிக்க வழிகளை உருவாக்க வேண்டும். இல்லையேல் சீனா போன்ற நாடுகளிடம் தொடர்ந்தும் கடனாளி ஆக நேரிடும்.
.