கடந்த வியாழன் முதல் கொழும்பிலும் சீன Bank of China வங்கியின் சீன நாணய clearing வங்கி ஒன்று சேவைக்கு வந்துள்ளது. அதனால் தற்போது சீனாவுக்கு வெளியே உள்ள 18 சீன யுவான் பரிமாற்று வங்கிகளில் இலங்கையும் இணைந்துள்ளது.
சீனாவின் மத்திய வங்கியான People’s Bank of China (PBOC) இந்த உரிமையை Bank of China வுக்கு வழங்கியுள்ளது.
சீனா தன்னை அமெரிக்க டாலரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் நோக்கில் நேரடியாக சீன யுவான் நாணயம் மூலம் கொடுப்பனவுகளை செய்யும் நோக்கிலேயே உலகம் எங்கும் சீன நாணய பரிமாற்று வங்கிகளை ஆரம்பிக்கிறது.
தற்போது சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக கொடுப்பனவுகள் அமெரிக்க டாலர் மூலமே செய்யப்படுகிறது. வியாழன் முதல் விரும்பியோர் இலங்கை ரூபாய்- சீன யுவான் மூலம் கொடுப்பனவுகளை செய்யலாம். அதனால் அமெரிக்கா இலங்கை தனது டாலரை பயன்படுத்துவதை தடை செய்தாலும் சீனாவுடனான வர்த்தகம் தொடரும்.
2025ம் ஆண்டு சீனாவில் இருந்து $5.15 பில்லியன் பெறுமதியான பொருட்கள் இற்றைக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் அமெரிக்க டாலர் மூலமே செய்யப்பட்டன.
அத்துடன் அமெரிக்காவின் SWIFT பண பரிமாற்று சேவைக்கு போட்டியான சீனாவின் புதிய Cross-Border Interbank Payment System (CIPS) பண பரிமாற்று சேவையும் இலங்கைக்கு கிடைக்கிறது.
