இலங்கையில் டெங்கு பாதிப்பு தொகை 55,894

Dengue

இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை டெங்கு தாக்கத்துக்கு ஆளானோர் தொகை 55,894 ஆக இருந்தது என்று கூறப்படுகிறது. அத்துடன் 2019 ஆம் ஆண்டின் முதல் 10 மாத காலத்தில் மட்டும் 74 பேர் டெங்கு நோய்க்கு பலியாகி உள்ளனர்.
.
2018 ஆம் ஆண்டில், மொத்தம் 12 மாதங்களில், 58 பேர் மட்டுமே டெங்கு நோய்க்கு பலியாகி இருந்தனர்.
.
மேற்கு மாகாணத்தில் மட்டும் 26,286 பேர் டெங்கு தாக்கத்துக்கு ஆளாகி இருந்தனர். மற்றைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் மேற்கு மாகாணத்திலே அதிகம் பேர் டெங்கு தாக்கத்துக்கு ஆளாகி உள்ளனர்.
.
மாவட்ட அடிப்படையில் கொழும்பு (11,854 பேர்), கம்பகா (8,976 பேர்), களுத்துறை (5,456 பேர்), இரத்தினபுரி, காலி ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.
.
டெங்கு நோயாளி Paracetamol என்ற வலி குறைப்பு மருந்தை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் Aspirin, Ibuprofen, Diclofenac Sodium, Mefenamic Acid போன்றவற்றை உட்கொள்ளக்கூடாது என்றும் கூறப்படுகிறது.
.
டெங்கு நோய்க்கு திடமான மருத்துவம் எதுவும் இல்லை என்கிறது WHO (World Health Organization).
.
டெங்கு நோய்க்கு உட்பட்டவரின் உடல் வெப்பநிலை 40C (104 F) வரை அதிகரிக்கலாம் என்றும், கடும் தலையிடி, கண்ணின் பின்பகுதியில் வலி, தசை மற்றும் மூட்டு வலி, வாந்தி, வாந்தியில் இரத்தம், களைப்பு போன்ற குணங்களில் சிலவும் காணப்படலாம் என்றும் கூறுகிறது WHO.
.