இலங்கையில் வங்கி சேவையை கைவிடும் HSBC, NTB கையேற்பு 

இலங்கையில் வங்கி சேவையை கைவிடும் HSBC, NTB கையேற்பு 

சர்வதேச வங்கியான Hongkong and Shanghai Banking Corporation (HSBC) இலங்கையில் தனது சில்லறை வங்கி சேவையை கைவிடுகிறது. HSBC யின் இலங்கை பிரிவை இலங்கை National Trust Bank (NTB) இலங்கை ரூபாய் 18 பில்லினுக்கு கொள்வனவு செய்கிறது.

மேற்படி இணக்கப்படி தற்போதைய சுமார் 200,000 இலங்கை HSBC வாடிக்கையாளர், HSBC credit card கொண்டோர், HSBC கடன் பெற்றோர் NTB வங்கிக்கு மாற்றப்படுவார். HSBC ஊழியர்களும் NTB வங்கியில் இணைவர்.

இந்த இணக்கம் நேற்று செப்டம்பர் மாதம் 24ம் திகதி அறிவிக்கப்படுள்ளது. இந்த கைமாற்றம் 2026ம் ஆண்டு நடுப்பகுதியில் முற்றுப்பெறும்.

1865ம் ஆண்டு பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களால் ஹாங்காங்கில் ஆரம்பிக்கப்பட்ட HSBC தற்போது பிரித்தானியாவிலேயே தலைமை காரியாலத்தை கொண்டுள்ளது.