இலங்கை அகதிகளை கடத்தியவருக்கு Haiti 32 மாத சிறை

இலங்கை அகதிகளை கடத்தியவருக்கு Haiti 32 மாத சிறை

இலங்கையில் இருந்து அமெரிக்கா செல்ல விரும்புவோரை Haiti என்ற நாட்டுக்கு எடுத்து, அங்கிருந்து Turks and Caicos Islands (TCI) க்கு நகர்த்தி, அங்கிருந்து Bahamas ஊடாக அமெரிக்காவுக்கு அழைத்து செல்ல முயன்ற மோகன் என்ற ஸ்ரீ கஜமுகன் செல்லையா என்பவரே TCI நீதிமன்றால் தண்டிக்கப்படுகிறார்.

Toronto வாசியான மோகன் அகதிகளை சிறு படகுகள் மூலம் கடத்தும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இவர் 2019ம் ஆண்டு ஜூலை 1ம் திகதி முதல் அக்டோபர் 10ம் திகதி வரை அகதிகளை கடத்தி உள்ளார் என்கிறது அமெரிக்க அரசு.

2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது குழுவில் இருந்த 28 அகதிகளை 40 அடி நீள படகு ஒன்றில் Haiti யில் இருந்து TCI க்கு கடத்தும் பொழுதே இவர் கைப்பற்றப்பட்டார்.

அதே படகில் 106 ஆண்களும், 17 பெண்களும், 2 சிறுவர்களும் இருந்துள்ளனர். ஏனையோர் Haiti நாட்டவர் என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 28 பேருள் 7 பேர் ஏற்கனவே அமெரிக்காவுக்கு விசாரணைகளுக்காக அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். மேலும் 5 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். மிகுதி 16 பேரும் TCI இல் அகதி நிலைக்கு விண்ணப்பித்து உள்ளனர்.