இலங்கை ஊடு ISக்கு இந்திய ஊக்க மருந்து

Tradamol

இந்தியாவில் இருந்து, இலங்கை ஊடாக, மத்திய கிழக்கின் IS என்ற ஆயுத குழுவுக்கு சென்ற பெருந்தொகை நோவை மறைக்கு (pain killer) மருந்துகளை இத்தாலிய போலீசார் இன்று கைப்பற்றி உள்ளனர். 1977 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் விற்பனைக்கு வந்திருந்த Tramadol என்ற இந்த மருந்து pain killer ஆக பயன்படுத்தும் ஒரு opioid pain medication ஆகும்.
.
இத்தாலி பொலிஸாரின் கூற்றுப்படி மூன்று கொள்கலன்களில் இருந்த சுமார் $75 மில்லியன் பெறுமதியான இந்த மருந்து பொட்டலங்களுள் 37 மில்லியன் குளிசைகள் இருந்துள்ளது. ஆனால் பொட்டலங்கள் போர்வைகள் (blanket), shampoo என அடையாளம் இடப்பட்டு இருந்துள்ளன.
.

இந்திய மருந்து நிறுவனம் ஒன்றால் $250,000 க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த குளிசைகள் அங்கிருந்து இலங்கை துறைமுகம் வந்த பின் ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. பின்னர் இத்தாலியில் இருந்து இவை வாடா ஆபிரிக்க நாடான லிபியா செல்லவிருந்த.
.
லிபியாவில் இந்த குளிசை ஒன்று சுமார் $2 ஆகும். லிபியாவில் IS ஆதிக்கம் அதிகம். இந்த குளிசைகள் நோ உணர்வை குறைத்து, பசி உணர்வை குறைத்து, ஊக்கத்தை அளிப்பதால் IS தமது உறுப்பினர்க்கு இதை வழங்குவதாக கூறப்படுகிறது. அத்துடன் பொதுமக்களுக்கு விற்பனை செய்து இலாபமும் அடைவர்.
.