இலங்கை சட்டப்படி கடனில் முறிந்தது

இலங்கை சட்டப்படி கடனில் முறிந்தது

பெற்றுக்கொண்ட கடனுக்கான $78 மில்லியன் வட்டியை செலுத்த தவறியதால் இலங்கை சட்டப்படி மே 18ம் திகதி முறிந்துள்ளது. மேற்படி வட்டி உரிய காலத்தில் (ஏப்ரல் 18) மட்டுமன்றி மேலதிகமாக வழங்கப்பட்ட 30 தினங்கள் (grace period) தாண்டியும் (மே 18) செலுத்தப்படவில்லை. சுதந்திர இலங்கையில் இவ்வாறு இடம்பெறுவது இதுவே முதல் தடவை. இதை sovereign default என்பர்.

ஏப்ரல் 18ம் திகதி சீனாவுக்கான $105 மில்லியன் கடனும் திருப்பி அடைக்கப்படவில்லை.

Sovereign default அடைந்த நாடுகள் மேலும் கடன் பெறுவது கடினமாகும். அதனால் பெருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். உள்நாட்டில் வட்டி வீதமும் அதிகரிக்கும். வேலைவாய்ப்புகளும் குறைவடைந்து செல்லும். தற்போது சுமார் 30% ஆக இருக்கும் இலங்கையின் பணவீக்கம் (inflation) 40% வரை அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.

BlackRock, Allianz, Fidelity, Neuberger Berman, UBS ஆகிய கடன் வழங்கும் நிறுவனங்களே இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கி உள்ளன. இந்த நிறுவனங்கள், சீனா, ஜப்பான் போன்ற நாடுகள், IMF போன்ற அமைப்புகளிடம் இலங்கை தற்போது சுமார் $52 பில்லியன் கடனை கொண்டுள்ளது.

முன்னரும் சில நாடுகள் sovereign default நிலையை அடைந்துள்ளன. 1557ம் ஆண்டு Spain இந்நிலையை அடைந்து இருந்தது. அதற்கு பின் சுமார் 15 தடவைகள் spain default ஆகி இருந்தது.

2001ம் ஆண்டு அர்ஜென்டீனா $132 பில்லியன் கடனில் default ஆகி இருந்தது. இது பின்னர் 2016ம், 20202ம் ஆண்டுகளிலும் default ஆகி இருந்தது.

1918ம் ஆண்டிலும், பின்னரும் ரஷ்யாவும் default ஆகி இருந்தது.

1998 மற்றும் 2020ம் ஆண்டுகளில் யுக்ரைன் கடனில் default ஆகி இருந்தது.

2017ம் ஆண்டு Venezuela $60 பில்லியன் கடனில் default ஆகி இருந்தது.

2015ம் ஆண்டு Greece இரண்டு தடவைகள் default ஆகி இருந்தது.

2010ம் ஆண்டு Jameica $7.9 பில்லியன் கடனில் default ஆகி இருந்தது.

2008, 2020ம் ஆண்டுகளில் Ecuador default ஆகி இருந்தது.