இலங்கை சீனாவிடமிருந்து மேலும் $2.5 பில்லியன் பெறும்

இலங்கை சீனாவிடமிருந்து மேலும் $2.5 பில்லியன் பெறும்

இலங்கை சீனாவிடம் இருந்து மேலும் $2.5 பில்லியன் கடன் பெறவுள்ளதாக திங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் $1 பில்லியன் கடனாகவும் (loan), மிகுதி $1.5 பில்லியன் credit line ஆகவும் இருக்கும்.

இந்த செய்தியை இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவிடம் இருந்து $1 பில்லியன் கடன் பெற்ற பின்பே இலங்கை இந்த புதிய கடனை சீனாவிடம் இருந்து பெறுகிறது.

போதிய அந்நியசெலவாணி இன்மையால் இலங்கை உணவு, எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது உள்ளது.

முன்னர் International Monitory Fund அமைப்பிடம் உதவிக்கு செல்வதை இலங்கை அரசு தவிர்த்து இருந்தாலும், தற்போது இந்த அரசு IMF உதவியையும் நாடி உள்ளது.