இலங்கை தத்தெடுப்பில் 70% போலி பிறப்பு சான்றிதழ்கள்

SriLanka

1970 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான காலத்தில் சுமார் 750 இலங்கை குழந்தைகள் சுவிஸ் நாட்டவரால் தத்து எடுக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அந்த குழந்தைகளில் சுமார் 70% குழந்தைகளுக்கு பொய்யான பிறப்பு சான்றிதழ்கள் (birth certificates) பயன்படுத்தப்பட்டு உள்ளதாக புதிய ஆய்வுகள் அறிந்துள்ளன.
.
Swiss Canton of St. Gallen விடுத்துள்ள அறிக்கையே இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. இவ்விசயம் தொடர்பாக ஜேர்மன் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும் நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பி இருந்தது.
.
சுவிட்சலாந்து நாட்டின் சூரிச் (Zurich) நகர் பகுதில் வாழ்ந்து வரும் Olivia Ramya Tanner என்ற பெயர் கொண்ட இலங்கையில் பிறந்த பெண் தனது பிறப்பு தாயை தேடி இலங்கையின் இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு (Ratnapura General Hospital) சென்றுள்ளார். அவரின் பிறப்பு சான்றிதலின்படி அவர் அந்த வைத்தியசாலையிலேயே பிறந்துள்ளார். ஆனால் வைத்தியசாலையில் அவ்வாறு ஒரு பதிவு இருக்கவில்லை.
.
Geraldine என்ற பெண்ணும் தனது பிறப்பு தாயை தேடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
.
Sarah Ramani Ineichen என்பவரும் தனது பிறப்பு தாயை தேடியுள்ளார். இவரின் பிறப்பு தாயார் அடையாளம் காணப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் DNA தரவுகளின்படி அவர் Ineichen என்பவரின் பிறப்பு தாய் அல்ல என்று அறியப்பட்டு உள்ளது.
.
1970 முதல் 1990 ஆம் ஆண்டு வரையான காலத்தில் சுமார் 11,000 இலங்கை குழந்தைகள் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் தத்து எடுக்கப்பட்டு உள்ளனர்.
.
குழந்தைகளை பெற்ற தாய்களுக்கு அவர்களின் குழந்தைகள் பிறப்பின்போது இறந்து விட்டதாக கூறி, அந்த குழந்தைகளை விற்பனை செய்ததாக இந்த அறிக்கை கூறுகிறது. சில தாய்மார் தமது குழந்தைகளை மறைக்க தத்துக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
.
இந்த முன்னாள் இலங்கை குழந்தைகள் Back to the Roots என்ற அமைப்பை நிறுவி, தமது தாய்மாரை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

.

Back to the Roots Web Link

.

.