இலங்கை நீதிக்கு அமெரிக்கா U$ 4.5 மில்லியன்!

இன்று 17 ஆம் திகதி (01.17.2013) மாத்தறை வர்த்தக சம்மேளனத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Sison ஆற்றிய உரையின் ஒரு சிறு பகுதி இங்கே தரப்படுகிறது:

“மாத்தறையில் மீண்டும் சந்திப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.”

“பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை தொடர்பில் எமது அரசாங்கத்தின் கரிசனை குறித்து வெளியான செய்தித்தலைப்புகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த குற்றப்பிரேரனையானது இலங்கையிலுள்ள அதிகார வேறாக்கம் குறித்தும் அதன் பிரசன்னமின்றிய நிலையில் ஜனநாயக நிறுவனங்களுக்கு ஏற்பாடும் தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது.”

“வொஷிங்டனிலுள்ள எமது பேச்சாளர் இவ்வாரத்தில் குறிப்பிட்டதுபோன்று முதலீடுகளில் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.எனக்குறிப்பிட்டிருந்தார், “இந்த விவகாரமானது இலங்கை தொடர்பான சர்வதேச நன்மதிப்பை மலினப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன் வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளக்கூடிய முதலீடுகள் தொடர்பான தீர்மானங்களிலும் தாக்கம் செலுத்தக்கூடியதாக அமையும். அந்தவகையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துக்கொள்ளும் ஆற்றலை இவ்வாறான விடயம் பாதிப்புறச்செய்யும்”.”

“நாட்டினதும் மக்களதும் தேவைகளை சந்திக்கக்கூடியதான செயற்திறன் மிக்க சட்ட பொறிமுறையே வலுமிக்க வாணிப சூழலை ஏற்படுத்தும் நோக்கை ஈடுசெய்வதில் முக்கிய அம்சமாக திகழ்கின்றதென்பதை வர்த்தகத்தலைவர்களாகிய நீங்கள் ஆமோதிப்பீர்கள் என நான் அறிவேன்.”

“இதற்காகவே நாம் இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துகின்ற நிகழ்ச்சித்திட்டங்களில் செயலாற்றிவருகின்றோம். USAID நிறுவனத்தினூடாக 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியில் புதிதாக சட்டத்துறையில் விரைவான பதிலளிப்பிற்கான நிகழ்ச்சித்திட்டத்தை நாம் வடிவமைத்துள்ளோம். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்கா இலங்கையின் நீதி அமைச்சு, நீதிச்சேவைகள் ஆணைக்குழு, மற்றும் நீதிபதிகள் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுடன் கைகோர்த்துள்ளது.”