இலங்கை ரெயில்சேவை அபிவிருத்திக்கு $160 மில்லியன்

SriLanka

இலங்கை ரெயில் சேவை அபிவிருத்திக்கு $160 மில்லியன் கடன் வழங்க ADB (Asian Development Bank) இணங்கி உள்ளது. அதேவேளை இலங்கை அரசு $32 மில்லியன் முதலீட்டை செய்யும்.
.
இப்பணம் புதிய காகித, smart-phone, மற்றும் smart-card ticket முறையை நடைமுறை செய்யவும், ரெயில் சாரதிகளுக்கு நவீன தொலைத்தொடர்புகளை வழங்கவும், உபகாரங்களை புதுப்பிக்கவும் பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது.
.
இலங்கையில் தற்போது இயங்கும் உபகரணங்களின் அரை பங்கு சுமார் 30 வருட பழமையானவை என்று கூறப்படுகிறது.
.
2008 ஆண்டில் இயங்கிய வாகனங்களின் தொகையின் இரண்டு மடங்கு வாகனங்கள் 2018 ஆம் ஆண்டில் அங்கு இயங்கியதாக கூறப்படுகிறது. ஆனாலும் வீதிகள் அதற்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்படாமையால் மக்கள் போக்குவரத்து பெரும் நெருக்கடியில் உள்ளது. தரமான ரெயில் சேவை அந்த நெருக்கடியை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
.