இலங்கை வரும் சீன ஆய்வு கப்பலை தடுக்க இந்தியா அழுத்தம்

இலங்கை வரும் சீன ஆய்வு கப்பலை தடுக்க இந்தியா அழுத்தம்

இலங்கைக்கு வரும் Yuan Wang 5 என்ற சீன ஆய்வு கப்பலை தடுக்குமாறு இந்தியா இலங்கைக்கு அழுத்தம் வழங்கி வருகிறது. ஆனாலும் Yuan Wang 5 இலங்கையை நோக்கியே தற்போதும் பயணித்துக்கொண்டு உள்ளது.

அந்த கப்பலின் வருகையை காலவரையறை இன்றி பின்போடுமாறு இலங்கை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சீனா அக்கப்பலின் பயண திசை மாறியதாக இதுவரை கூறவில்லை. முதல் திட்டபப்டி கப்பல் ஆகஸ்ட் 11ம் திகதி அம்பாந்தோட்டை  துறைமுகத்தை அடைந்து பின் 17ம் திகதி வெளியேறும்.

மேற்படி கப்பல் செய்மதிகள் மூலமான தொடர்பாடல்களை கொண்டது. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அவதானிக்கவும் வல்லது. இது 2007ம் ஆண்டு சேவைக்கு வந்திருந்தது.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவால், சீனாவின் கடனில் கட்டப்பட்டது. அத்துடன் அது தற்போது 99-ஆண்டு குத்தகை அடிப்படையில் சீனாவின் கையில் உள்ளது.