இலங்கை விசாவை கையாள தற்போது VFS Global 

இலங்கை விசாவை கையாள தற்போது VFS Global 

இலங்கையின் விசா விண்ணப்ப பணி தற்போது VFS Global என்ற நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதுவரை இலங்கை விசாவை வழங்கிய ETA இணையம் மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட VFS Global கனடா போன்ற வேறு பல நாடுகளுக்கும் விசா விண்ணப்ப பணிகளை செய்கிறது. VFS Global விண்ணப்ப பணிகளை செய்தாலும், விசா வழங்கும் தீர்மானம் அந்தந்த நாடுகளாலேயே செய்யப்படுகின்றன.

இதுவரை $50 ஆக இருந்த 30-தின உல்லாச பயண விசா கட்டணம் தற்போது $75 ஆக அதிகரித்தது மட்டுமன்றி, VFS Global தனது சேவைக்கு மேலும் $18.5 அறவிடுகிறது. இதனால் பயணிகள் விசனம் கொண்டுள்ளனர் என்கிறார் எதிர்க்கட்சி தலைவர்.

இலங்கையான விசா வழங்கும் புதிய இணையம்:

https://www.srilankaevisa.lk/

அதேவேளை கப்பல் மூலம் இலங்கை வருவோர்க்கு இன்னோர் இணையம் மூலம் விசா வழங்கப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விசா 4-தின விசா ஆக இருக்கும் என்றும், அதற்கு $25 கட்டணம் அறவிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த இணையம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Cruise ship மூலம் வருவோர்க்கு இந்த 4-தின விசா பயன்படலாம்.