இலச்சத்தீவிலும் ப.ஜா. இந்துவாத ஊடுருவல்

இலச்சத்தீவிலும் ப.ஜா. இந்துவாத ஊடுருவல்

சுமார் 64,000 மக்கள் வாழும் இலச்சத்தீவில் (Lakshadweep) கடந்த டிசம்பர் மாதம்வரை கரோனா தோற்றாளர் எவரும் இருந்திருக்கவில்லை. ஆனால் தற்போது அங்கு சுமார் 10% மக்களுக்கு கரோனா தொற்றி உள்ளது. அதற்கு பிரதமர் மோதியால் அந்த யூனியன் பிரதேசத்துக்கு அனுப்பப்பட்ட Praful Khoda Patel என்ற உயர் அதிகாரியே காரணம் என்று கூறப்படுகிறது.

டிசம்பர் வரை அங்குள்ள 36 தீவுக்குகளுக்கு செல்லும் அனைவருக்கும் கரோனா தனிமைப்படுத்தல் முறைமை இருந்து வந்தது. ஆனால் டிசம்பர் மாதம் 2ம் திகதி அங்கு வந்த Patel (ஒரு முன்னாள் குஜராத் அமைச்சர்) உடனடியாக தனிமைப்படுத்தலை நீக்கி இருந்தார். தற்போது அங்கு கரோனா தோற்றாளர் தொகை 10% ஆக அதிகரித்துள்ளது.

அந்த தீவுகளில் வாழும் சனத்தொகையில் 96% இஸ்லாமியரே. இஸ்லாமிய காழ்ப்பு கொண்ட பா.ஜா. உறுப்பினரான Patel பல இஸ்லாமிய விரோத சட்டங்களையும் நடைமுறை செய்துள்ளார்.
Patel அங்கு மாட்டிறைச்சி உண்பதை தடை செய்துள்ளார்.

அதேவேளை அவர் அங்கு 40 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுபான தடையை நீக்கியும் உள்ளார். அங்கு 2 பிள்ளைகளுக்கும் மேலான எண்ணிக்கையில் பிள்ளைகளை கொண்டோர் உள்ளூர் தேர்தல்களில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு எந்த நிலத்தையும் அதிகாரிகள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சட்டம் உருவாக்கப்பட்டும் உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக குயாராத்தியான Patel அந்த தீவுகளில் உள்ள அனைத்து பால் பண்ணைகளையும் மூடி, பதிலுக்கு குஜராத் மாநில வர்த்தகர் ஒருவருக்கு பால் உணவு இறக்குமதி மற்றும் வர்த்தக உரிமையை வழங்கி உள்ளார்.

திங்கள் கிழமை அருகில் உள்ள கேரளா மாநில அரசு மேற்படி Patel மத்திய அரசால் திருப்பி அழைக்கப்படல் வேண்டும் என்று பிரேரணை ஒன்றை நிறைவேற்றி உள்ளது. இலச்சத்தீவுகளுக்கு மிக அருகில் உள்ள மாநிலம் கேரளவே.

இந்தியாவில் படிப்பறிவு வீதம் 74% ஆக இருக்கையில் இந்த தீவுகளில் படிப்பறிவு வீதம் 92% ஆக உள்ளது.