இஸ்ரேலின் இராணுவத்தை படம்பிடிக்க தடை?

Israel

இஸ்ரேல் இராணுவத்தை படம் பிடிப்பதை சட்டப்படி தடை செய்ய முனைகிறது இஸ்ரேல் அரசு. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், இஸ்ரேல் இராணுவத்தை படம் பிடிப்போர் (photograph அல்லது film) 10 வருட சிறை தண்டனையை பெற நேரிடும்.
.
மனிதநேய அமைப்புகள் இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனார் மீது செய்யும் சட்டவிரோத அல்லது கடும்போக்கு நடவடிக்கைளை படம்பிடித்து பகிரங்கம் செய்வதால் இஸ்ரேல் இராணுவமும், அரசும் கடந்த காலங்களில் அவப்பேருக்கு உள்ளாகின.
.
2016 ஆம் ஆண்டில் ஒருதடவை காயப்பட்டு, நடமாட முடியாது இருந்த பலஸ்தீன மனிதர் ஒருவரை இஸ்ரேல் இராணுவம் சுட்டு கொலை செய்திருந்தது. அதை B’Tselem என்ற இஸ்ரேல் அமைப்பு படம்பிடித்து பகிரங்கம் செய்திருந்தது. அதனால் இஸ்ரேல் அரசும், இராணுவமும் அவமானம் அடைய நேர்ந்தது. இவ்வகை அவமானங்களை தவிர்க்கவே புதிய சட்டம் உருவாக்கப்படுகிறது.
.
B’Tselem என்ற பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் இஸ்ரேல் அமைப்பே இந்த புதிய சட்டத்துக்கான முதலாவது காரணியாகும். இந்த அமைப்பின் பேச்சாளர் Amit Gilutz தனது கூற்றில் “ஆக்கிரமிப்பு அவமானம் என்றால், ஆக்கிரமிப்பை முதலில் நிறுத்தல் வேண்டும்” என்றுள்ளார்.
.

இஸ்ரேலின் கூட்டு ஆட்சியில் அங்கம் பெறும் Yisrael Beitenu கட்சியால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சட்டம் தற்போது இஸ்ரேலின் பாராளுமன்ற விவாதங்களில் உள்ளது.
.