இஸ்ரேலில் 500 நாட்களின் பின் கூட்டு அரசாங்கம்

Israel

கடந்த 500 நாட்களாக (சுமார் 18 மாதங்கள்) முறைப்படியான ஆட்சி இன்றி இருந்த இஸ்ரேலில் இன்று ஞாயிறு கூட்டு அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
.
கடந்த 500 நாட்களில் அங்கு 3 தேர்தல்கள் இடம்பெற்று இருந்தன. அந்த மூன்று தேர்தல்களில் எந்தவொரு கட்சியும் ஆட்சியை அமைக்க தேவையான ஆசனங்களை வென்று இருக்கவில்லை. மூன்று தேர்தல்களும் ஏறக்குறைய ஒரே முடிவையே வழங்கி இருந்தன.
.
மேலுமொரு தேர்தலை (4 ஆவது தேர்தலை) நடாத்தினாலும் முடிவு மாறாது என்ற நிலையில் முன்னனியில் உள்ள காட்சிகள் கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைக்க இணங்கின.
.
இந்த கூட்டு ஆட்சியின் முதல் 18 மாதங்களுக்கு தற்போதைய பிரதமர் Netanyahu பிரதமராக பதவி வகிப்பார். எதிர்க்கட்சி தலைவர் Gantz புதிதாக உருவாக்கப்பட்ட இன்னோர் (alternate) பிரதமராக இருப்பார். பதினெட்டு மாதங்களின் பின் Gantz பிரதமர் ஆக, Netanyahu இன்னோர் பிரதமர் ஆவார்.
.
இந்த மாதம் 24 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ள தன் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே Netanyahu பிரதமராகவும், பின் இன்னோர் பிரதமராகவும் இருக்க முனைகிறார் என்று கருதப்படுகிறது.
.