புதன் காலை டுபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற Flydubai (FZ 1073) விமான விமானி ஒருவரை மற்றைய விமானி கூறிய ஆயுதத்தால் குத்தி தாக்கியதால் விமானத்தில் குழப்பம் ஏற்பட்டு பின் விமானம் சவுதியின் Tabuk விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளது.
இந்த Boeing 737 Max 8 விமானத்தில் 174 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. தாக்கிய விமானி சவுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலின்போது இந்த விமானம் 2 நிமிடங்களில் 5,200 மீட்டர் (17,400 அடி) கீழே விழுந்துள்ளது. ஆனாலும் பணியாளர்களினதும் பயணிகளினதும் உதவியுடன் தாங்கியவர் கட்டுப்படுத்தப்பட்டு விமானம் Tabuk விமான நிலையத்தில் இறங்கி உள்ளது.
தாக்குதலின் பின் விமானத்தை திசை திருப்ப பயன்படும் வாலின் பகுதியை (tail rudder) விமானம் இழந்துள்ளது.
Tabuk விமான நிலையத்தில் முடங்கிய பயணிகளை மீட்க இஸ்ரேல் படைகளின் விமானத்துக்கு சவுதி அனுமதி வழங்காதபடியால் இன்னோர் Flydubai விமானம் பயணிகளை இஸ்ரேலுக்கு எடுத்து சென்றுள்ளது.
தாக்கிய விமானி ஓமான் நாட்டவர் என்றும், தாக்கப்பட்ட விமானி Smit Machchhar என்ற இந்திய விமானி என்றும் கூறப்படுகிறது.
தாக்கிய விமானியின் நோக்கம் விமானத்தை கடத்துவது அல்லது தரையில் மோதி அழிப்பதாக இருந்திருக்கலாம்.
இஸ்ரேலுக்கான Flydubai விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு உள்ளன.
