இஸ்ரேல் தாக்கி 7 World Central Kitchen தொண்டர் பலி

இஸ்ரேல் தாக்கி 7 World Central Kitchen தொண்டர் பலி

காசாவில் யுத்தத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்ட World Central Kitchen (WCK) என்ற தொண்டர் நிறுவன வாகனம் மீது இஸ்ரேல் வான்படை தாக்கியதால் 7 தொண்டர்கள் பலியாகி உள்ளனர்.

பலியானோரில் அமெரிக்க-கனேடிய இரட்டை குடியுரிமை கொண்டவர், அஸ்ரேலியர், பிரித்தானியர், போலாந்துக்காரர் ஆகியோரும் அடங்குவர்.

அமெரிக்கா தலைமையில் சைப்ரஸ் நாட்டில் இருந்து இழுவை கப்பல்கள் மூலம் எடுத்துவரப்பட்ட உணவுகளை மக்களுக்கு வழங்கும் பணியையே WCK தொண்டர்கள் செய்து வந்துள்ளனர்.

மேற்படி தொண்டர்களின் வாகன பயணம் இஸ்ரேல் இராணுவத்துடன் இணைந்தே திட்டமிடப்பட்டது. அத்துடன் WCK சின்னம் வாகனத்தின் கூரையில் வரையப்பட்டும் இருந்தது. ஆனாலும் இஸ்ரேல் வான்படை அந்த வாகனத்தை தாக்கியுள்ளது.

ஐ. நாவின் UNRWA அமைப்பும் இதுவரை 173 தனது தொண்டர்கள் காசாவில் பலியாகி உள்ளதாக கூறுகிறது. வேறு பல தொண்டர் நிறுவனங்களும் தமது தொண்டர்களை காசாவில் இழந்துள்ளன.