இஸ்ரேல் மேஜர் ஜெனரல் ஆபத்தில்; பதவி விலகல், தலை மறைவு, சிறை 

இஸ்ரேல் மேஜர் ஜெனரல் ஆபத்தில்; பதவி விலகல், தலை மறைவு, சிறை 

இஸ்ரேல் இராணுவத்தின் முன்னிலை சட்டத்தரணியான மேஜர் ஜெனரல் Yifat Tomer-Yerushalmi என்ற பெண் ஆபத்தில் உள்ளார். கடந்த கிழமை வரை பதவியில் இருந்த இவர் திடீரென தனது பதவியில் இருந்து விலகி, தலை மறைவானார். இவரை தேடிய இஸ்ரேல் கடந்த ஞாயிறு இரவு கடற்கரை ஒன்றில் கைது செய்து தற்போது சிறையில் அடைந்துள்ளது. 

இவர் இஸ்ரேல் படைகள் Sde Teiman என்ற இராணுவ சிறையில் இருந்த பலஸ்தீன கைதிகளை சித்திரவதை செய்வதை கொண்ட வீடியோக்களை கசிய விட்டதே இவர் மீது கடும்போக்கு இஸ்ரேல் இராணுவம் பாய காரணம். 

சித்திரவதை செய்யப்பட்ட பலஸ்தீனரில் எலும்பு முறிவுகள், அடிவயிற்று காயங்கள், குதங்களில் காயங்கள் இருந்ததாக வைத்தியசாலை கூறியுள்ளது. 

கடந்த ஜூலை மாதம் சித்திரவதை செய்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இஸ்ரேல் இராணுவத்தினரை கைது செய்ய இராணுவ போலீஸ் (Miliary Police) Sde Teiman சிறைக்கு சென்றபோது கடும்போக்கு யூதர்கள் சிறையுள் நுழைந்து கைதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இவரைப்போல் இஸ்ரேல் படைகளின் கேணல் Matan Solomesh என்பவரும் கசிவுகள் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரும் இஸ்ரேல் படைகள் பலஸ்தீனரை துன்புறுத்தும் வீடியோக்கள் கசிய காரணமானவர் என்று கூறப்படுகிறது.

இஸ்ரேல் படைகள் பலஸ்தீனருக்கு செய்யும் வன்முறைகளை மறைக்க இஸ்ரேலின் கடும்போக்கு யூதர்கள் எதையும் செய்யும் முனைப்பில் உள்ளனர்.