இஸ்ரேல் காசாவில் genocide செய்துள்ளது என்று ஐ.நா.வின் விசாரணை ஆணைக்குழு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் அதற்கு என்ன பதில் நடவடிக்கை எடுக்கவுள்ளது என்று ஐ.நா. கூறவில்லை.
The Independent International Commission of Inquiry on the Occupied Palestinian Territory என்ற ஆணைக்குழு 2021ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கை மொத்தம் 5 வகை genocide களில் இஸ்ரேல் 4 வகை genocide களை செய்துள்ளது என்கிறது. அவையாவன 1) ஒரு இனத்தினரை கொலை செய்தது, 2) ஒரு இனத்தவரை உடல் மற்றும் உள அளவில் காயப்படுத்தியது, 3) ஒரு இனத்தை திட்டமிட்டு அழித்தது, 4) ஒரு இனத்தவரின் பிறப்பை தடுப்பது ஆகும்.
ஐ.நா. உலகத்தில் மிக பெரிய சனநாயகம் அற்ற அமைப்பு. ஐந்து நாடுகள் மற்ற எல்லா நாடுகளையும் அடக்கி ஆள அவர்களால் வடிவமைத்த அமைப்பு. இதில் வீட்டோ வாக்கு கொண்ட 5 நாடுகள் சொல்வதே சட்டம்.
ஐ.நா.வின் இன்னோரு காரமான International Court of Justice (ICJ) தற்போதும் தனது காசா விசாரணையை செய்கிறது. இறுதியில் இவை எல்லாமே வெறும் கண்துடைப்பு நாடகங்களாக முடியலாம்.