ஈரானில் இருந்து வெளியேறியது Total

Total

Total என்ற மிகப்பெரிய பிராஸ் நாட்டு எண்ணெய் அகழ்வு நிறுவனம் ஈரானில் தனது செயல்பாடுகளை நிறுத்தி, அங்கிருந்து வெளியேறுகிறது. இந்த செய்தியை ஈரானிய அரசு இன்று திங்கள் வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவின் ரம்ப் அரசு ஈரான் மீது தடை விதிக்கவுள்ள நேரத்தில், Total அமெரிக்காவில் உள்ள தனது எண்ணெய் அகழ்வு திட்டங்களை பாதுகாக்கும் நோக்கில் ஈரானில் இருந்து வெளியேறுகிறது.
.
2015 ஆம் ஆண்டில் ஒபாமா அரசு, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பின்னர், Total ஈரானுடன் $4.8 பில்லியன் எண்ணெய் அகழ்வு திட்டத்துக்கு இணங்கி இருந்தது. South Pars II என்ற இந்த திட்டத்தில் Total 50.1% பங்கையும், சீனாவின் CNPC (China National Petroleum Corp) நிறுவனம் 30% பங்கையும், ஈரான் 19.9% பங்கையும் கொண்டிருந்தன. தற்போது Total வெளியேறிய நிலையில், சீனாவின் CNPC 80.1% பங்கை கொண்டிருக்கவுள்ளது. அது சீனாவுக்கு நீண்டகால, இடர் அற்ற எண்ணெய் மற்றும் எரிபொருள் கிடைக்க வழிசெய்யும்.
.
இந்த திட்டம் நாள் ஒன்றுக்கு 2 சுமார் பில்லியன் சதுர அடி இயற்கை வாயுவை (natural gas) வெளியிட உள்ளது. இன்றைய சந்தை விலைப்படி இப்பகுதியில் உள்ள இயற்கை வாயுவின் மொத்த பெறுமதி சுமார் $3.0 டிரில்லியன் என்று கணிப்பிடப்பட்டு உள்ளது.
.
இந்த திட்டம் 2021 ஆம் ஆண்டளவில் உற்பத்தியை ஆரம்பிக்கும்.
.