ஈரானில் விமானம் வீழ்ந்து 176 பேர் பலி

Flight_PS752

யுக்கிறேன் (Ukraine) நாட்டுக்கு சொந்தமான Ukraine Internation Airlines விமானம் ஒன்று ஈரானின் தலைநகர் தெகிரான் (Tehran) விமான நிலையம் இன்று அருகே வீழ்ந்துள்ளது. அதில் பயணித்த 176 பேரும் பலியாகி உள்ளதாகவும் நம்பப்படுகிறது.
.
மேற்படி விமானம், Flight PS752, தெகிரானில் இருந்து யுக்கிறேனின் தலைநகர் கியேவ் (Kyiv) நோக்கி சென்றது. இதன் பயணம் அதிகாலை 6:12 மணிக்கு ஆரம்பித்து இருந்தது. இந்த விமானம் மேலேறி சில நிமிடங்களுள் வீழ்ந்துள்ளது. விபத்தின் பொழுது இது சுமார் 8,000 அடி உயரத்தையே அடைந்துள்ளது.
.
இந்த விமான விபத்துக்கும் அதே காலத்தில் அங்கு இடம்பெற்ற ஏவுகணை தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
.
2016 ஆம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த இந்த Boeing 737-800 விமானம் மிகவும் புதியது. ஆனால் இது Boeing 737 MAX வகையானது அல்ல.
.
மரணித்தோருள் ஈரான் (82), கனடா (63),  யுக்கிறேன்(11), சுவீடன் (10), ஆப்கானித்தான் (4), பிரித்தானியா (3), ஜெர்மனி (3) ஆகிய நாட்டவரும் அடங்குவர்.
.