ஈரான் அணு உடன்படிக்கை மரண படுக்கையில்

Iran-Nuclear

2015 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சனாதிபதி ஒபாமா காலத்தில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் ஈரானுடன் செய்து கொண்ட அணு உடன்படிக்கையான JCPOA இன்று மரண படுக்கை சென்றுள்ளது. இந்த உடன்படிக்கையின் இறுதி அத்தியாயத்தை பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் இன்று திங்கள் ஆரம்பித்து உள்ளன.
.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய மூன்று நாடுகளும் இன்று ‘dispute mechanism’ என்ற செயற்பாட்டை ஆரம்பித்து உள்ளன. இதன் உள்நோக்கம் ஈரான் உடன்படிக்கையை மீறி செயல்படுகிறது என்று குற்றம் சாட்டி அதன் மூலம் மீண்டும் ஐ.நா. தடைகளை நடைமுறை செய்வதே. உண்மையில் உடன்படிக்கையில் இருந்து முதலில் வெளியேறி, ஈரான் மீது தடைகளை விதித்தது அமெரிக்காவே.
.
அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட முடியாத ஐரோப்பிய நாடுகள் ஈரானின் இறுதி நடவடிக்கைகளை சாதகமாக பயன்படுத்தி ரம்ப் வழி செல்ல முயல்கின்றன.
.
ஒபாமா மீது காழ்ப்பு கொண்ட ரம்ப், ஒபாமா செய்த உடன்படிக்கையை விடுத்தது, ரம்ப் பெயரிலான உடன்படிக்கையை நடைமுறை செய்ய முனைகிறார். பிரித்தானியாவின் பிரதமர் ஜான்சனும் ரம்புக்கு ஆதரவாக உள்ளார்.
.
அமெரிக்காவின் வர்த்தகத்தில் பெருமளவு தங்கியுள்ள ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை பகைக்கா.
.