ஈரான் இராணுவம் பயங்கரவாதிகள் என்கிறது அமெரிக்கா

Iran

இன்று திங்கள் ஈரானின் Iranian Revolutionary Guards Corps (IRGU) என்ற அரச இராணுவ பிரிவை ஒரு பயங்கரவாதிகள் குழு என்று பட்டியல் இட்டுள்ளது ரம்பின் அமெரிக்க அரசு. ஒரு நாட்டு அரச படைகளை பயங்கரவாத இயக்கம் என்று அமெரிக்கா பட்டியலிடுவது இதுவே முதல் தடவை.
.
உண்மையில் ரம்ப் இவ்வாறு செய்தது இஸ்ரேலில் நடைபெறும் தேர்தலில் தனது நண்பனான Netanyahu என்பருக்கு வாக்கு சேர்க்கும் நோக்கமே என்று கருதப்படுகிறது.
.
பயங்கரவாதிகள் என்ற பதமும், போராளிகள் என்ற பதமும் அனைத்து சர்வதேச நாடுகளாலும் தமது அரசியல் இலாபத்துக்கு ஏற்ப பயன்படுத்தப்படும் பதங்கள். ஒருகாலத்தில் அமெரிக்கா தென் ஆபிரிக்காவின் நெல்சன் மண்டேலாவையும் ஒரு பயங்கரவாதி என்று படியால் இட்டிருந்தது. பின்னர் அவரை ஒரு தியாகி என்றும் புகழாரம் செய்திருந்தது.
.
அதேவேளை Free Syrian Army,  Kurdish குழுக்கள் போன்ற அரச சார்பற்ற பல ஆயுத குழுக்களை ஆதரித்து, ஆயுதங்கள் வழங்கி, அவர்களுடன் ஒன்றாக ஒன்றாக நின்று போரிட்டும் வருகிறது அமெரிக்கா.
.
அல்கைட போன்ற குழுக்களுடன் உறவு கொண்டுள்ள ஆயுத குழுக்களையும் அமெரிக்கா பயங்கரவாதிகள் என்று தாக்கினாலும், ஈரானின் இராணுவத்துடன் உறவுகொண்டு  செயல்படும் ஈராக் போன்ற நாடுகளை அமெரிக்கா தாக்காது. ஈராக்கின் உறவு அமெரிக்காவுக்கு அவசியம்.
.