சீன கப்பல் துறை மீதான அமெரிக்க சனாதிபதி ரம்பின் யுத்தமும் நேற்று செவ்வாய் உக்கிரம் அடைந்துள்ளது. வளர்ச்சி அடைந்த சீன கப்பல் துறையை கட்டுப்படுத்த அமெரிக்கா வரும் சீன தொடர்புடைய கப்பல்களுக்கு ரம்ப் முதலில் மேலதிக கட்டணம் அறவிட்டார். பதிலடியாக செவ்வாய் சீனாவும் அவ்வகை கட்டணத்தை அமெரிக்க தொடர்புடைய கப்பல்களுக்கு அறிவித்துள்ளது.
கப்பல் கட்டுமான துறையில் தென் கொரியா ஒரு காலத்தில் முன் இருந்திருந்தாலும் தற்போது சீனா முதலாம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா 14ம் இடத்தில் உள்ளது. இதை விரும்பாத ரம்ப் சீன தொடர்பு கொண்ட அமெரிக்கா வரும் கப்பல்களுக்கே கடந்த வெள்ளி மேலதிக கட்டணத்தை அறிவித்திருந்தார்.
சீன தொடர்பு கொண்ட கப்பல்கள் என்பதில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கப்பல்கள், சீன நிறுவன உரிமை கொண்ட கப்பல்கள், சீன கொடி கொண்ட கப்பல்கள், சீன நிறுவனம் இயக்கும் கப்பல்கள் எல்லாம் அடங்கும்.
அவ்வகை கட்டணம் ஒன்றையே சீனா நேற்று செவ்வாய் அறிவித்து உள்ளது. அத்துடன் அமெரிக்காவில் கிளை கப்பல் கட்டும் நிறுவனங்களை கொண்ட தென்கொரிய கப்பல் கட்டும் நிறுவனங்களையும் சீனா அமெரிக்க நிறுவங்களாக கணிக்கிறது. Hanwha என்ற தென் கொரிய நிறுவனம் அமெரிக்காவில் Philly Shipyard போன்ற 4 கிளை கப்பல் கட்டும் நிறுவனங்களை கொண்டுள்ளது.
உலக கப்பல் போக்குவரத்துக்கு இந்த யுத்தத்தாலும் பெரும் குழப்பம் அடைந்துள்ளது.
COSCO என்ற சீன கொள்கலன் காவும் கப்பல் நிறுவனம் உலகத்தில் 4ஆவது பெரிய கப்பல் நிறுவனமாகும்.