உதவி சீக்கிரம் கிடையாது என்கிறது IMF

உதவி சீக்கிரம் கிடையாது என்கிறது IMF

இலங்கை அவசர உதவியை IMF அமைப்பிடம் இருந்து எதிர்பார்த்தாலும், அவ்வாறு விரைவில் உதவிகள் வழங்கப்படாது என்று IMF கூறி உள்ளது. IMF கூற்றுப்படி விரிவான உரையாடல்கள் செய்து (extension discussions), நிலைக்கக்கூடிய (sustainable) திட்டங்களை அறிந்து, உறுதி (assurances) மொழிகளை பெற்ற பின்னரே உதவிகள் வழங்கப்படும்.

இந்த கருத்தை இலங்கைக்கான IMF அதிகாரி Masahiro Nozaki இன்று கூறியுள்ளார். அத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவே அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு Rapid Financing Instrument (RFI) என்ற அவசரகால உதவியும் கிடைக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வகை உதவி இயற்கை அழிவு போன்ற காரணங்களுக்கே வழங்கப்படும்.

எரிபொருள்களின் விலைகளை மட்டுமன்றி மின்சாரத்தின் விலையையும் அதிகரிக்க IMF கூறலாம்.

இலங்கை மீண்டும் சீனாவிடம் மேலும் கடன் பெற முனையலாம்.

அமெரிக்க டாலர் ஒன்றுக்கு தற்போது 335 இலங்கை ரூபாய்கள் வரை சட்டப்படியான வங்கிகளில் கிடைக்கிறது.