உயர்படிப்பு முதலீட்டில் சீனா முன்னிடம்

உயர் கல்விக்கு அதியுயர் முக்கியத்துவம் கொடுக்கும் நாடாக இன்று சீனா விளங்குகிறது. சீனாவின் உயர் கல்விக்கான தற்போதைய வருடாந்த செலவீடு சுமார் U$ 250 பில்லியன். சுமார் 10 வருடத்தின் முன் இங்கு உயர்கல்விக்கான செலவீடு $30 பில்லியன் அளவிலேயே இருந்தது. அப்போது சீனா சுமார் 2 மில்லியன் பட்டதாரிகளையே வருடமொன்றில் உருவாக்கியது. ஆனால் தற்போது சுமார் 8 மில்லியன் பட்டதாரிகளை வருடமொன்றில் உருவாக்குகிறது. இந்த வேகம் தொடருமாயின் தற்போது ‘Made in China’ பொருட்களை கொள்வனவு செய்யும் நாடுகள் விரைவில் ‘Made in China’ பட்டதாரிகளையும் கொள்வனவு செய்யக்கூடும்.

1970 களில் அமெரிக்காவே 25% இற்கும் அதிகமான உலகளாவிய உயர்கல்வி மாணவ அனுமதிகளை வழங்கி வந்திருந்தது. அப்போது சீனாவின் அனுமதி உலகமொத்தத்தின் 1% இலும் குறைவு. அனால் இன்று அமெரிக்காவின் உயர்கல்வில் அனுமதி உலக மொத்தத்தின் சுமார் 12%. அதேவேளை சீனாவின் மொத்த அனுமதி சுமார் 18%.

சீனாவில் தற்போது சுமார் 2400 உயர்கல்வி நிலையங்கள் (colleges, universities) உள்ளன. 1996 ஆண்டளவில் 35 மாணவ வயதினரில் 5 மாணவரே பாடசாலையை பூர்த்தி செய்திருந்தார். அமெரிக்காவில் இந்நிலை 1919 களில் இருந்திருந்தது. ஆனால் இப்போது சீனாவில் 35 மாணவ வயதினரில் 21 மாணவர் பாடசாலையை பூர்த்தி செய்கிறார்கள்.

இந்தியா போன்ற நாடுகள் பிரித்தானியர் விட்டுச்சென்றதுக்கு மேலாக பாரிய அளவில் முதலீடு எதையும் செய்யவில்லை.

தரவுகள்: New York Times, UNESCO