முதல் முறையாக சவுதி அரேபியா உல்லாச பயணிகள் மீது நாட்டம் கொண்டுள்ளது. அந்நாட்டின் புதிய செயல்படுகள் உலகம் எங்கும் இருந்து உல்லாச பயணிகள் சவுதி செல்வதை ஊக்குவிக்க உள்ளன.
.
இதுவரை மெக்கா செல்லும் பயணிகளும், பாரிய முதலீட்டாளர்களும், தொழில் புரிவோரும் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து சவுதி செல்லக்கூடியதாக இருந்தது. ஆனால் விரைவில் உல்லாச பயணிகளையும் சவுதி வரவேற்கவுள்ளது.
.
உல்லாச பயணிகளை வரவேற்க சவுதி தீர்மானித்தாலும், சில கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நிலவும். மது பாவனை தொடர்ந்தும் தடையில் இருக்கும். வெளிநாட்டு பெண்கள் இஸ்லாமிய பெண்கள் போன்று முகத்தை மூடி ஆடை அணிதல் அவசியம் இல்லை என்றாலும், ஒழுக்கமான ஆடைகள் அணிதல் அவசியம். மெக்கா போன்ற இஸ்லாமிய தலங்களுக்கு இஸ்லாமியர் அல்லாத உல்லாச பயணிகள் செல்ல முடியாது.
.
முதலில் சுமார் 50 நாடுகளின் கடவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே சவுதிக்கான உல்லாச பயண விசா பெறக்கூடியதாக இருக்கும். அந்த நாடுகளின் பட்டியல் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் அந்த பட்டியலில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
.
2030 ஆம் ஆண்டளவில் தனது GDP யின் 10% த்தை உல்லாச பயணிகள் மூலம் பெற விரும்புகிறது சவுதி. விரைவில் உலகம் எங்கும் எண்ணெய் பாவனை குறைவடையலாம் என்று சவுதி பயம் கொண்டுள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் 500,000 hotel அறைகளை கொண்டிருக்க முனைகிறது சவுதி.
.
 
									