ஊழல் கணிப்பில் இலங்கை 85வது இடத்தில்

TransparencyInt

Transparency International என்ற ஊழல் எதிர்ப்பு குழு நடாத்திய இந்த ஆண்டு கணிப்பில் இலங்கை 38 புள்ளிகளை மட்டும் பெற்று 85வது இடத்தை அடைந்துள்ளது. Burkina Faso, இந்தியா, Jamaica, Peru, Philippines, Thailand, Trinidad and Tobago, Zambia போன்ற நாடுகளும் 38 புள்ளிகளை பெற்று 85 இடத்தை இலங்கையுடன் இணைந்து பெற்றுள்ளன. மொத்தம் 174 நாடுகள் இந்த கணிப்பில் உள்ளடக்கப்பட்டு இருந்தன.
.
Denmark 92 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தையும், New Zealand 91 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும், Finland 89 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தையும், Sweden 87 புள்ளிகளை பெற்று நாலாம் இடத்தையும் பெற்றுள்ளன.
.
சிங்கப்பூர் 84 புள்ளிகளை பெற்று 7ஆம் இடத்தை பெற்றுள்ளது. அதேவேளை இந்திய உபகண்டத்தை சுற்றியுள்ள நாடுகளில் பூட்டான் மட்டுமே 65 புள்ளிகளை பெற்று 30வது இடத்தை அடைந்துள்ளது.
.
கனடா: 81 புள்ளிகள் , 10வது இடம்
ஆஸ்திரேலியா: 80 புள்ளிகள், 11வது இடம்
ஜெர்மனி: 79 புள்ளிகள், 12வது இடம்
UK: 78 புள்ளிகள், 14வது இடம்
ஜப்பான்: 76 புள்ளிகள், 15வது இடம்
Hong Kong: 74 புள்ளிகள், 17வது இடம்
அமெரிக்கா: 74 புள்ளிகள், 17வது இடம்
.

தரவு: http://www.transparency.org/cpi2014/results