எகிப்தின் சிசியை புகழ்பாடினார் டிரம்ப்

Egypt

இராணுவ கவிழ்ப்பு மூலம் ஆட்சிக்கு வந்த எகிப்தின் அல் சிசியை (Abdel Fattah al-Sisi) இன்று புகழ் பாடியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். டிரம்ப்பை சந்திக்க இன்று வெள்ளைமாளிகை வந்திருந்தார் அல் சிசி. அப்போதே அல் சிசியை புகழ் பாடியுள்ளார் டிரம்ப்.
.
“சிலவேளைகளில் அங்கே சந்தேகங்கள் இருந்தாலும் நான் எல்லோருக்கும் கூற விரும்புவது நாங்கள் ஜனாதிபதி சிசியின் பின்னாலேயே உள்ளோம்” என்றுள்ளார் டிரம்ப். அத்துடன் சிசி “is done a fantastic job in a  very difficult situation” என்றும் கூறியுள்ளார் டிரம்ப்.
.
எகிப்தில் சர்வாதிகார ஆட்சி செய்யும் சிசி 40,000 முதல் 60,000 வரையான அரசியல் கைதிகளை அடைத்து வைத்துள்ளார் என்று கூறுகின்றன மனித உரிமைகள் அமைப்புகள். அத்துடன் 2016 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1,400 பேர் சிசி ஆட்சியின்போது படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. சிசிக்கு வெள்ளைமாளிகை அழைத்ததை வன்மையான சாடியுள்ளார் Human Right Watch அதிகாரியான Sarah Margon.
.
இன்றைய சிசியின் வெள்ளைமாளிகை பயணத்துக்கு முன், 2009 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி முபாரக் வெள்ளைமாளிகை சென்றிருந்தார்.
.

அமெரிக்கா சுமார் $1.3 பில்லியனை எகிப்துக்கு இராணுவ நன்கொடையாக வழங்குகிறது.
.