எகிப்தில் ஈரானிய ஜனாதிபதி Ahmadinejad

சுமார் 32 வருடங்களின் பின் ஈரானிய ஜனாதிபதி ஒருவர் எகிப்துக்கு பயணம் செய்துள்ளார். மாசி மாதம் 6 ஆம் திகதி எகிப்தில் நடைபெற உள்ள Organisation of Islamic Cooperation (OIC) இல் பங்கு கொள்வதற்காக அங்கு சென்ற Ahmadinejad எகிப்திய ஜனாதிபதி மோர்சி உட்பட பல உயர்மட்ட எகிப்திய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். 1980 களில் எகிப்து அமெரிக்காவின் கைப்பொம்மை ஆனபின், எகிப்துவுக்கும் ஈரானுக்கும் இடையில் உறவுகள் முறிந்திருந்தன. அம்முறிவு முபாரக் பதவியில் இருந்து 2012 ஆம் ஆண்டில் துரத்தப்படும்வரை நீடித்தது.

சிரியா விடயத்தில் எகிப்தும் ஈரானும் ஒருவருக்கு ஒருவர் முரணான கொள்கைகளை கொண்டிருந்தாலும், மோர்சியின் வரவின் பின் ஈரானுக்கும் எகிப்துக்கும் இடையிலான உறவு பலமாகிக்கொண்டே செல்கிறது. எகிப்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது சிரியா விடயம் பற்றியும் இவர்கள் கருத்து பரிமாறியுள்ளனர்.

அண்மையில் எகிப்திய ஜனாதிபதி மோர்சி ஈரானுக்கு பயணம் மேற்கொண்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.