எகிப்து கிறிஸ்தவ தேவாலய தீக்கு 41 பேர் பலி

எகிப்து கிறிஸ்தவ தேவாலய தீக்கு 41 பேர் பலி

எகிப்தின் தலைநகர் Cairo வுக்கு அண்மையில் உள்ள Giza என்ற நகரில் உள்ள Abu Sifin Coptic தேவாலய தீக்கு குறைந்தது 41 பேர் பலியாகியும், 55 காயமடைந்தும் உள்ளனர்.

மின் ஒழுக்கே விபத்துக்கு காரணம் என்று அப்பகுதி போலீஸ் அறிக்கை கூறுகிறது. விபத்து இடம்பெற்ற வேளையில் சுமார் 5,000 பேர் தேவாலயத்தில் இருந்துள்ளனர். விபத்து உள்ளூர் நேரப்படி ஞாயிறு காலை 9:00 மணிக்கு நிகழ்துள்ளது.

தேவாலய வாசல் தடைப்பட்டதானாலே அதிகமானோர் மரணித்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மூன்றாம், நாலாம் மாடிகளில் இருந்தோர் இரண்டாம் மாடியில் தீ பரவியதை அறிந்து கீழே தப்பி ஓட முனைந்து உள்ளனர். ஆனால் வாசல்கள் தடைப்பட்டு இருந்துள்ளன.

எகிப்தின் மொத்த சனத்தொகை 103 மில்லியன். அதில் 10 மில்லியன் பேர் Coptic கிறீஸ்தவர்.