எட்டு மாதத்தில் 43 மில்லியன் கலன் பால் விரயம்

DumpedMilk

இந்த வருட முதல் 8 மாதங்களில் அமெரிக்க பசுப்பால் உற்பத்தியாளர்களால் 43 மில்லியன் கலன் பசுப்பால் விரயமாக்கப்பட்டு உள்ளதாம். பெரும்பாலும் இவை நிலத்தில் ஊற்றப்பட்டு விரயம் செய்யப்பட்டு உள்ளன. ஐந்தொகை பால் 66 ஒலிம்பிக் தர நீச்சல் தடாகங்களை நிரப்ப போதுமானது.
.
தற்போது அமெரிக்காவில் பசுப்பால் உற்பத்தி மிக கூடி, அதனால் விலை மிக குறைந்து உள்ளது. பாலை எடுத்து செல்வதற்கான செலவு, விற்பனை விலையையும் விட அதிகம் ஆகிவிட்டதாலேயே இவ்வாறு பால் விரயம் செய்யப்படுகிறது.
.
இவ்வாறு பால் விரயமாக்கப்படல் வழமையான நிகழ்வு என்றாலும், இத்தொகை பால் விரயமாக்கப்படல் இம்முறையே இடம்பெற்று உள்ளது.
.

அமெரிக்க உணவு சாலைகள் பால் மூலமான புதிய உணவுகளை அறிமுகப்படுத்தவும் முனைந்துள்ளன.
.