எண்ணெய் சுத்திகரிப்பை இரண்டு மடங்காக்க திட்டம்

SriLanka

இலங்கையின் சுத்திகரிக்கப்படும் எரிபொருளின் அளவை இரண்டு மடங்காக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இலங்கை நாள் ஒன்றில் சுமார் 50,000 பரல் மசகு எண்ணெய்யை மட்டுமே சுத்திகரிக்க முடியும். திட்டம் நிறைவேறின் இலங்கை சுமார் 100,000 பரல்களை நாள் ஒன்றில் சுத்திகரிக்க முடியும். இவ்வகை அதிகரிப்புக்கான வேலைகளுக்கு சுமார் $2.2 பில்லியன் தேவைப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
.
அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இதை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. அதேவேளை இந்த புதிய சுத்திகரிப்பு திருகோணமலை அல்லது மாத்தறை ஆகிய இடங்களில் அமையலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தீர்மானங்கள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
.

2011 ஆம் ஆண்டளவில் இலங்கை 60% எரிபொருளை இலங்கையிலேயே சுத்திகரித்திருந்தது. ஆனால் தபோது சுமார் 35% எரிபொருளே இலங்கையில் சுத்திகரிக்கப்படுகிறது. ஏனையவை சுத்திகரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விலை அதிகமாகும். இலங்கையில் செய்யப்படும் சுத்திகரிப்பை இரண்டு மடங்காக்கில், வருடம் ஒன்றில் சுமார் $400 மில்லியன் சேமிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
.