எல்லோரும் தோல்வி அடைவார், சீனா எச்சரிக்கை

NorthKoreaTest

இன்று “கொரியா குடாவில் கடுமையான சொற்களை பயன்படுத்துகிறவரோ, அல்லது சண்டைக்கு கையை உயர்த்துகிறவரோ அல்ல வெல்லுவது, பதிலாக எல்லோருமே தோல்வியை அடைவார்” என்றுள்ளார் சீனாவின் வெறியுறவு அமைச்சர் Wang Yi. அமெரிக்காவும், வடகொரியாவுக்கு ஒருவர் மீது மற்றவர் யுத்த எச்சரிக்கை விடுக்கையிலேயே சீன அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
.
அமெரிக்காவில் பெருமளவில் நையாண்டி செய்யப்பட்ட ஜனாதிபதி டிரம்ப், சிரியாவின் மீது 59 ஏவுகணைகளை ஏவியபின் அமெரிக்காவில் அதிகரித்த பாராட்டை பெற்றார். உடனடியாக ஆப்கானித்தானிலும் மிகப்பெரிய குண்டு அமெரிக்காவால் போடப்பட்டது.
.
தற்போது, அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலை கொரியா குடாவுக்கு அனுப்பிய நிலையில், டிரம்ப் அவசியம் எனின் வடகொரியா தாக்கப்படும் என்று கூறியுள்ளார். அவ்வாறு அமெரிக்கா தம்மை தாக்கினால், தாமமும் திருப்பி பலமாக தாக்குவேம் என்றுள்ளனர் வடகொரியாவின் தலைவர்கள்.
.
நெருக்கடியை தணிக்கும் நோக்கில், நேரடியான அல்லது மறைமுகமான பேச்சுவார்த்தைகளுக்கு சீனா உதவும் என்றுள்ளார் சீனாவின் வெளிவிவகார அமைச்சர்.
.
சில கண்காணிப்பாளரின் அவதானிப்புகளின்படி வடகொரியா தனது 6வது அணுகுண்டு பரிசோதனைக்கு தயார் செய்துள்ளது.
.