ஏப்ரல் 8 வட அமெரிக்காவில் பூரண சூரிய கிரகணம்

ஏப்ரல் 8 வட அமெரிக்காவில் பூரண சூரிய கிரகணம்

வரும் ஏப்ரல் 8ம் திகதி வட அமெரிக்காவில் பூரண சூரிய கிரகணம் இடம்பெறும். இந்த கிரகணம் சில இடங்களில் 4 நிமிடங்கள் 28 செக்கன்களுக்கு இருளை பரப்பும்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வருவதால் இந்த கிரகணம் ஏற்படுகிறது.

வட அமெரிக்காவின் தென் மேற்கில் ஆரம்பித்து வடகிழக்கு நோக்கி இந்த கிரகணம் நகரும். அதனால் இது Mazatlan (Mexico); 4m 14s, Dallas; 3m 47s, Little Rock; 2m 33s, Indianapolis; 3m 46s, Cleveland; 3m 50s, Niagara Falls/Buffalo; 3m 45s, Montreal; 1m 12s ஆகிய நகரங்கள் ஊடு செல்லும்.

இந்த கிரகணம் 185 km அகலமான பாதையில் உள்ளோர்க்கு 100% கிரகணமாக இருக்கும்.

கனடாவின் Niagara Falls நகரம் அன்றைய தினம் 1 மில்லியன் கிரகணம் விரும்பிகள் நீர்வீழ்ச்சி பகுதிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறது. அதனால் அன்றைய தினம் அவசரகால சட்டத்தை நடைமுறை செய்து மேலதிக சேவைகளை வழங்கவுள்ளது.

சூரிய கிரகணத்தை நேரடியாக கண்களால் பார்ப்பது ஆபத்தானது.