காசாவில் சமாதானம் அமைத்து அதை அபிவிருத்தி செய்யவென்று அமெரிக்க சனாதிபதி தன் தலைமையில் உருவாக்கும் Board of Peace என்ற அமைப்பை உண்மையில் ஐ.நா. வுக்கு மாற்றீடாக உயர்த்த முனைவது தெரிகிறது.
இந்த Board of Peace காசாவில் ஆரம்பித்து இருந்தாலும் இதன் தற்போதைய வரைவிலக்கணத்தில் காசா என்ற சொல்லே இல்லை என்று கூறப்படுகிறது.
இதன் புதிய வரைவிலக்கணம் “an international organization that seeks to promote stability, restore dependable and lawful governance, and secure enduring peace in areas affected or threatened by conflict” என்று அமைகிறது. அதாவது இந்த அமைப்பு தற்போது உலகுக்கே தலைமை ஆகிறது.
அத்துடன் இந்த அமைப்பின் தனி தலைவராக (chairman) ரம்ப் இருப்பார். பின்வரும் அமெரிக்கா சனாதிபதிகள் அந்த பதவியை கொள்வார்கள். ஏனைய உறுப்பினர் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கம் கொள்வர்.
செவ்வாய் ரம்ப் மீண்டும் தனது தலைமையிலான Board of Peace என்ற அமைப்பு ஐ.நா. வுக்கு மாற்றீடாக அமையக்கூடும் (“might”) என்றுள்ளார். அத்துடன் தான் யுத்தங்களுக்கு தீர்வு காண ஐ.நா. வுக்கு செல்வதில்லை என்றும் கூறினார்.
இந்த அமைப்பில் பங்கெடுக்க பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தாலும் பிரான்ஸ் உடனடியாக மறுத்து உள்ளது.
