ஐரோப்பாவில் மீண்டும் கரோனா உக்கிரம், வீதியில் வன்முறை

ஐரோப்பாவில் மீண்டும் கரோனா உக்கிரம், வீதியில் வன்முறை

ஐரோப்பாவில் மீண்டும் கரோனா தோற்று உக்கிரம் அடைய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக அஸ்ரியாவில் (Austria) முழு அளவிலான கரோனா முடக்கம் நடைமுறை செய்யப்பட்டுள்ளது. இந்த முழு முடக்கத்தை எதிர்த்து பல்லாயிரம் மக்கள் வீதிக்கு வந்து போலீசாருடன் மோதலில் ஈடுபட்டு உள்ளனர்.

அதேவேளை ஐ.நாவின் WHO என்ற உலக சுகாதார அமைப்பும் கரோனா மீண்டும் உக்கிரம் அடைவதையிட்டு கவலை தெரிவித்து உள்ளது. உரிய நடவடிக்கைகளை நடைமுடை செய்யாவிடில், அடுத்த மார்ச் மாதத்துள் மேலும் 500,000 உயிர்களை கரோனாவுக்கு இழக்க நேரிடும் என்றும் WHO எச்சரித்து உள்ளது.

அஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் (Vienna) சுமார் 30,000 பேர் கரோனா முடக்கத்தை எதிர்த்து வீதிக்கு வந்து போலீசாரிடம் மோதி வருகின்றனர். இவர்களில் பலர் வலதுசாரி கொள்கைகளை கொண்டோர். இவர்களுடன் இணைந்து வலதுசாரி கட்சியான Freedom Party யும் முடக்கத்துக்கு எதிராக போராடுகிறது.

அஸ்ரியாவின் முடக்கம் திங்கள் முதல் குறைந்தது 10 தினங்களுக்கு நீடிக்கும் என்றும், தேவைப்பட்டால் 20 தினங்கள் வரை நீடிப்படலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. சுமார் 8.9 மில்லியன் மக்களை கொண்ட அஸ்ரியாவில்சுமார் 66% பேர் மட்டுமே தடுப்பூசி பெற்று உள்ளனர்.

ஜெர்மனியும் தேவைப்பட்டால் மீண்டும் முடக்கத்துக்கு தயார் என்று கூறியுள்ளது. வெள்ளிக்கிழமை ஜெர்மனியில் சுமார் 63,924 புதிய கரோனா தொற்று பதிவாகி உள்ளது. பிரித்தானிய வெள்ளிக்கிழமை 44,242 புதிய கரோனா தொற்றுக்களை பதிந்துள்ளது.