ஐரோப்பிய பயணங்களுக்கு அமெரிக்கா 30-நாள் தடை

Coronavirus

அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் 30-நாள் பயண தடை ஒன்றை அமெரிக்க சனாதிபதி ரம்ப் இன்று புதன் விடுத்துள்ளார். ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதே காரணம் என்றும் ரம்ப் கூறியுள்ளார்.
.
ஐரோப்பிய நாடுகளுக்கான தடை பிரித்தானியாவை உள்ளடக்காது என்றும் ரம்ப்  கூறியுள்ளார். பிரித்தானியர் தொடர்ந்தும் அமெரிக்கா பயணிக்கலாம்.
.
சீனாவுக்கு அடுத்து இத்தாலியே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 12,000 கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐரோப்பாவில் மொத்தமாக 20,000 பேர் பாதிக்கப்படும், 930 பேர் பலியாகியும் உள்ளனர்.
.
அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸுக்கு ஆளானோர் தொகை 1,135 ஆகவும், பலியானோர் தொகை 38 ஆகவும் உள்ளன.
.
Forrest Gump (1994), Saving Private Ryan (1998) போன்ற பல படங்களை நடித்த பிரபல நடிகர் Tom Hanks உம், அவரது மனைவியும் அஸ்ரேலியாவில் படப்பிடிப்பு ஒன்றின்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கியதாக கூறியுள்ளனர். இருவரும் 63 வயதானோர்.
.
இன்று புதன்கிழமை World Health Organization (WHO) கொரோனா வைரஸை pandemic என்று வகைப்படுத்தி உள்ளது.
.