ஐ.நாவில் ரஷ்யாவை பகைக்காத தெற்கு ஆசியா

ஐ.நாவில் ரஷ்யாவை பகைக்காத தெற்கு ஆசியா

யுக்கிரைன் மீது ரஷ்யா செய்யும் தாக்குதலை கண்டிக்க ஐ. நாவில் இன்று புதன் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு (A/ES-11/L.1) தெற்கு ஆசிய நாடுகள் அனைத்தும் வாக்களியாது இருந்துள்ளன. இந்த தீர்மானத்துக்கு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேசம் ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. ஆனால் நேபாளும், பூட்டானும் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்து உள்ளன.

மொத்தம் 193 நாடுகளில் 141 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானத்தை ஆதரித்து உள்ளன. ரஷ்யா, பெலரூஸ், வடகொரியா, Eritrea, சிரியா, Russian Federation ஆகிய 5 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க, இந்தியா, சீனா, கியூபா இலங்கை உட்பட 35 நாடுகள் வாக்களியாது இருந்துள்ளன.

United Nations General Assembly செய்யும் இந்த தீர்மானம் ஒரு கண்டன தீர்மானம் மட்டுமே. இதற்கு மேலதிக வல்லமை எதுவும் இல்லை (not legally binding). இதற்கு முன் வெள்ளிக்கிழமை ஐ. நா. பாதுகாப்பு சபையில் (security council) இடம்பெற்ற வாக்கெடுப்பை ரஷ்யா தனது veto மூலம் தடுத்து இருந்தது. வல்லமை கொண்ட பாதுகாப்பு சபையின் தீர்மானம் சட்டப்படியானது.

அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் பக்கம் சாய இருந்த இந்தியா யுக்கிரைன் விசயத்தில் ஒரு குழப்பமான நிலையில் உள்ளது. யுக்கிரைன் விசயத்தில் தம்மை ஆதரிக்காத இந்தியாவை அமெரிக்காவும் சந்தேக கண்ணுடனேயே பார்க்கிறது.